இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பச்சை நிலம்: கவிஞர்.கோவிந்தராஜன் பாலு.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

வயலெல்லாம் பசுமையாய் வளமைக் கண்டேன்
        வரப்பெல்லாம் நீரோடி வழியக் கண்டேன்
இயல்பான சூழல்கள் இனிக்கக் கண்டேன்
      எழிலாகப் பறவைகளும் எங்கும் கண்டேன்

துயரங்கள் நீங்கியதால் துணிவாய் நெஞ்சம்
        துடிப்போடு விழாக்களுமே தொடரக் கண்டேன்
பயமில்லை வாழ்வினிலே பசியும் இல்லை
        பகல்கனவாய் கண்டேனே பதறிப் போனேன் !

நதியெல்லாம் கலந்திடவே நாட்டில் ஒன்றாய்
       நலத்திட்டம் வேண்டிடுவோம் நன்மைக் காண
விதியென்று வாழாதீர் விரைந்துத் திட்டம்
      விதித்திடவே வழிகாண்பீர் விதியை வெல்ல
கதியென்று காலங்கள் கரைந்துப் போக
      கனவெல்லாம் நனவாகக் காண்பீர் மாற்றம்
மதியினாலே மாறாத மாற்றம் இல்லை
      மாறிடுமே பச்சையாய் மாற்றம் கொண்டே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.