நீதியைத் தேடி: முனைவர். சி. அருள் ஜோசப் ராஜ்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

நெஞ்சுரமும் நேர்மையும் யின்றி நாட்டில் நெகிழிப்பை போலவேதான் வஞ்சனைகள் நெஞ்யிறுக்கி செய்வார்கள்! நன்மை தீமை நெறியறிந்தோர் நிதிபெற்றே சதிகள் செய்வார்!கொஞ்சமும் நேயமின்றி மதிமறந்தே கொள்கைநீக்கி கொலைகொள்ளை விரும்பிச் செய்வார்!தஞ்சமென வருவோற்கே வஞ்சகமே தக்கதொரு சமயத்தில் செய்திடுவார்!விஞ்சுகின்ற சுயநலத்தால் தாயின் பாசம், விரைந்தேதான் மறப்பார்நற் தந்தை நேசம்நஞ்சுகொண்டு வகுப்பாரே கொல்லத் திட்டம்! நயமுடனே பேசியேதான் ஏய்ப்பார் நம்மைபஞ்சொத்த மென்மையாலே மறைப்பார் உண்மை! பழிசொல்லி அவரும்தான் பெறுவார் நன்மை!எஞ்ஞரன்ரும் ஏமாற்றிப் பிழைப்ப தாலே என்னலாபம் கிட்டிவிடும் அறிவார் நன்றே!கொஞ்சமும் உழைக்காமல் பொருள் சேர்க்க கொடுஞ்செயல்கள் செய்வதற்க்கும் தயங்க மாட்டார்வாஞ்சையுடன் கைகூலி எதையும் செய்வார்! வானகத்து காற்றதனில் நஞ்சும் சேர்ப்பார்!தீஞ்சொல்லால் பிறர் மனதை புண்ணாக்கி தான் தீயபல விளைவுகளைத் தருவார் நித்தம்!விஞ்சான அறிவாலே இணையத்திலே வியக்குகின்ற மோசடிகள் பலவே செய்வார்.!வஞ்சகரை எண்ணியே நீதி தேட வந்துநின்றாள் நீதிதேவதை கண்கள் மூடி!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...