டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நீதியைத் தேடி:  கவிஞர் " இளவல் " ஹரிஹரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

நெடும்பயணம் செல்லவேண்டும் நீதி தேடி       நீதிக்கும் மக்கட்கும் ஆன தூரம்கடுந்துயரம் கொடுக்கின்ற தூர மாகும்       காக்கவரும் கரங்களுக்குள் கொலைவா ளுண்டு.மடுவிற்கும் மலைக்குமான தூரஞ் சென்று       மாநீதி பெறுவதற்கு முடிவ துண்டோ?கொடுமையிது நீதிபெறக் கால மானால்       கூறிடலாம் மறுக்கப்பட்ட நீதி யென்றே!சிறைச்சாலை தவச்சாலை ஆகு மென்றால்       செய்நீதி வரமெனலாம் ஆனால் இங்கோசிறைச்சாலை கொலைச்சாலை ஆன திங்கே,        செய்வதறி யாதுநிற்கும் எளியோ ருக்குமுறைதவறும் நீதியெனில் ஏது நன்மை?       முகத்தினிலே கட்டிநிற்கும் கருந்தி ரையோநெறிதவறும் நீதியினைக் குறிக்கு மன்றோ!       நியாயமிதோ சாய்கின்ற துலாக்கோல் நன்றோ!மக்கட்குக் கிடைக்கின்ற நீதி என்றும்       மாறாத தீர்ப்பாய்த்தான் இருக்க வேண்டும்.தக்கதொரு தருணத்தில் கிடைக்க வேண்டும்.       தருமத்தின் வழியிலது நிற்க வேண்டும்.மிக்கநல்ல நீதியாக விளங்க வேண்டும்.       மேதினிக்கோர் நல்லவழி காட்ட வேண்டும்.இக்கணமே இங்கெவர்க்கும் பொதுவாய் நீதி        இறையாண்மை மேலோங்கச் சேர வேண்டும்.நீதியினை நாம்தேடிப் போகா வண்ணம்        நீதிநம்மைத் தேடிவரும் நேர்மை செய்வோம்.பாதிவழி மாறிடாமல் பணத்தின் பின்னே        பலவாக ஓடிடாமல் ஆய்ந்து பார்த்துவாதிக்கும் விவாதங்கள் தேர்ந்த றிந்து        வழக்கதனை விரைவாக முடிக்க வேண்டும்.சாதிக்கும் நிலையாக நீதி வேண்டும்.      சமதர்மப் பாதையிலே ஓங்க வேண்டும்.                 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.