அழுத கண்ணீர்: லூர்து எஸ். ராஜ்


பிள்ளை அழுத கண்ணீர் பெற்ற தாயை அழைத்தது
பெரும் பக்தன் வடித்த கண்ணீர் கடவுளை வளைத்தது
கணவரை இழந்தவள் கண்ணீர் நிலத்தை நனைத்தது
கடலலை கொண்ட நீரோ மீனவன் மனைவி வடித்தது.
சீதையின் கண்ணீர் தென்னிலங்கையை அழித்தது;கற்பரசி
கண்ணகியின் கண்ணீர் கவினுரு மதுரையை மாய்த்தது.
போதையில் தள்ளாடி பாதைமாறி வருகின்ற கணவன்
பேதை மனைவி வடிக்கும் கண்ணீர் என்னத்தை செய்தது ?
பசியால் வாடும் ஏழையின் கண்ணீர் , படுக்கையில் கிடந்து
பலநாள் வடிக்கும் நோயாளியின் கண்ணீர், பிள்ளைகள்
அனாதை யாக்கிய முதியோர் கண்ணீர் , பெற்றோரை இழந்த
சுனாமிக் குழந்தையின் கண்ணீர், இவை துடைப்பவர் யாரோ?
மனித நேயம் மலர்ந்ததாயின் புனிதமாகும் இங்கு புத்துலகம்;
இனியொரு கண்ணீர்த்துளி எங்கும் விழுந்து வீணாகிடாமல்
மழைநீர்த்துளி அன்றி வேறோர் துளியில்லை எனும்நிலை
விழைந்தி டலாகும் ; விழிநீர் மறையும்; வியனுலகு மகிழும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...