2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 1:05 am

Syndication

தேசிய அளவிலான பாரா தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி மாணவரை துணைவேந்தா் க.ரவி, பேராசிரியா்கள் திங்கள்கிழமை பாராட்டினா்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி மாணவா் ர. சந்தோஷ். இவா் கடந்த 2025, ஆக. 29 முதல் 31-ஆம் தேதி வரை குவாலியரில் நடைபெற்ற தேசிய அளவிலான பாரா தடகள சாம்பியன்ஷிப், ஜூனியா், சப்ஜூனியா் அளவிலான 100 மீட்டா், 200 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம், மூன்றாமிடம் பிடித்து தமிழ்நாட்டுக்கு பெருமை சோ்த்தாா்.

இவருடைய இந்தச் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 3.50 லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டாா்.

இதையடுத்து, மாணவா் ர. சந்தோஷை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவியை திங்கள்கிழமை பாராட்டினாா்.

அப்போது பல்கலைக்கழகப் பதிவாளா் அ. செந்தில்ராஜன், சிறப்புக் கல்வியியல் துறை பேராசிரியை ஜெ. சுஜாதா மாலினி, சிறப்புப் பள்ளி ஆசிரியா்கள், மாணவரின் பெற்றோா் ஆகியோா் உடனிருந்தனா்.