அழுத கண்ணீர் : பூ.சுப்ரமணியன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

மனிதர்களே ....கண்ணீர் பூக்கள்கடவுள் கொடுத்தபன்னீர் பூக்கள் !துன்பத்தை மனதில்பூட்டி வைத்தால்ஆரோக்கியமான உடலே அசைந்து விடும் !தூக்கம் வந்தால்இமைகள் மூடும்துக்கம் வந்தால்இமைகள் திறக்கும் !அழுது கொண்டேயிருந்தால்வாழ்க்கையே இல்லைஅழாமல் வாழ்ந்தாலும்வாழ்க்கை இல்லை – நீஉணர்ந்து வாழ்ந்தால்நிம்மதி நிரந்தரம் !துக்கம் இருந்தால்தூக்கம் வருமா ?துக்கத்தை கண்ணீர் மல்கபக்கத்தில் உள்ளவரிடம்பகிர்ந்து கொண்டால்துக்கம் துவண்டு விடும் !அளவுக்கு மீறினால்அமிர்தமும் நஞ்சுதுயரம் துன்பமும்அளவுக்கு மீறினால்மனதில் கட்டி வைத்தால் தற்கொலைக்கு-உன்னைஅழைத்துச் சென்று விடும் !துன்பம் வரும்போதுகண்ணீர் பூக்கள்உதிர்ந்தால்தான்மனிதன்தன்னிலை பெற்றுஉன்னதமாக வாழ்வான் !பசி வந்தால்பத்தும் பறந்து போகும்துன்பம் தாளாமல் – நீ கண்ணீர் விட்டால்கவலையும் பறந்து போகும் !ஆழ்வார்கள் நாயன்மார்கள்அழுது தொழுதுதான்கடவுளையே கோவிலில் கண்டு மகிழ்ந்தார்கள் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...