2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அழுத கண்ணீர் : சியாமளா ராஜசேகர் 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

அழுத கண்ணீர் ஆற்றலையே 
****அன்பு நெஞ்சைத் தேற்றலையே !
பழுது மென்ன புரியலையே 
****பனித்த விழியும் காயலையே !

விழுது போல இருந்தவரின் 
****விதியும் முடிந்தே போனதுவோ ?
முழுதாய் மண்ணுள் புதைத்துவிட்டு 
****முரணால் தவித்துத் துடிக்கின்றோம் !

பிறந்த போதே எழுதிவைத்த 
****பிரியும் நாளே கசப்பாகும்  !
இறந்த பின்னும் அறமொன்றே 
****இறுதி வழிக்கும் துணையாகும்  !

உறவே என்றும் நற்துணையாய் 
****உரிமை யோடே கூடவரும்  !
மறலி முன்னே வந்தாலும் 
****வலுவாய் விரட்ட முனைந்துநிற்கும் !

இனியும் யாரை நம்புவதோ 
****இதயக் கனியே நீசொல்வாய் !
தனித்து நின்றே சாதித்த 
****தகைமை வருமோ யாருக்கும் !
கனிந்த உன்றன் அன்புமனம் 
****கனவாய்ப் போன தேயின்று !
புனிதம் காத்துப் பெருமைதனைப்
****பூக்கச் செய்ய யார்வருவார் ....???

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.