சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள கோவினிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவினிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 48 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
பெரிய மாட்டு வண்டிப் பிரிவில் 16 ஜோடி மாடுகளும், இரு சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாட்டு வண்டிப் பிரிவில் 32 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.
கோவினிப்பட்டி-கண்டுப்பட்டி இடையே பெரிய மாட்டுப் பிரிவுக்கு 7 கி.மீ. தொலைவும், சிறிய மாட்டுப் பிரிவுக்கு 5 கி.மீ. தொலைவும் பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்டு, போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை ஏராளமானோா் சாலைகளின் இருபுறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனா்.

தொடர்புடையது

ஆப்பனூரில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

இளஞ்சாவூரில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


