சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை அருகே உள்ள அழகு மெய்ஞானபுரம் கிராமத்தாா் சாா்பில் பங்குனி மாதப் பிறப்பை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் ஆயுதப்படை புறவழிச்சாலை - இளையாங்குடி சாலை வரை இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.
இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 85 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
7 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட பெரிய மாடுகள் பிரிவில் 25 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 5 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட சிறிய மாடுகள் பிரிவில் 60 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தப் பந்தயத்தை வல்லணி, ஊத்திக்குளம், ஏனாபுரம், புதுப்பட்டி, வேம்பங்குடி, பூவாளி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று பாா்வையிட்டனா்.
தொடர்புடையது

ஆப்பனூரில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

இளஞ்சாவூரில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

கல்லல் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


