2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அழுத கண்ணீர்:  கவிஞர் " இளவல் " ஹரிஹரன்,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

அழுதகண்ணீர் அன்பினடை யாள மாகும்     ஆற்றவொண்ணா துயர்தீர்க்கும்  வலிமை கொண்டுதொழுதகரம் துணையாக நிற்கும் அந்தத்      தூயமனக் கண்ணீர்தான் சொந்த மாகும்.விழும்போது தூக்கிவிடும் கைகள் என்றும்     விரல்களினால் துடைத்துவிடும் கண்ணீஂரையே...தழும்பாகக் கண்ணீரின் தடங்கள் காயா      தழுவிநிற்கும் தென்றலென மேனி தீண்டி.முதலையெனக் கண்ணீரை வடிக்கும் மக்கள்       முற்றுமொரு வேடமாகத் துக்கங் காட்டிமுதுகுக்குப் பின்பகடி பேசி கேலி       முழுவதுமாய் செய்துமனக் கோட்டந் தன்னைபொதுவினிலே காட்டிமிக மகிழ்வர் மாக்கள்       போல்வரிவர் மாந்தரல்லர் இவர்போன் றோரைமெதுவாக வல்ல,மிக வேக மாக      விரட்டியடித் தலேநமக்கென் றென்றும் நன்றாம்.துடைக்கப்ப டாதழுத கண்ணீர், பாயும்      தோட்டாவாய் ஆயுதமாய்த் தோற்றங் கொள்ளும்மடைதிறந்தாற் போலவொரு மாற்றங் காட்டும்      மக்களிடை புரட்சிசெய உறுதி செய்யும்கடையரின் கண்ணீரோ அழுத்தங் கொண்டு      கச்சிதமாய்ச் சுனாமியாக அழிக்கும் மெல்லவெடித்தெழவே வீரியமாய்ச் சமுதா யத்தில்     விறுவிறுப்பாய் மறுமலர்ச்சி உதய மாக்கும்.                        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.