அழுத கண்ணீர் : H ஹாஜா மொஹினுதீன்


அழுத கண்ணீர் ஆறாய் பெருகியதில் -
கடல் நீரும் உப்பாய் ஆனதே !
விட்டுப்பிரிந்ததில் வீதியிலே நாங்கள் -
விரக்தி போக்க விழித்தும் பாராயோ !
அழுது அழுது சிவந்த கண்களுக்கு ;
ஆறுதல் சொல்லவும் ஆளில்லை !
திரும்பி நீயும் வாராயோ !
திருமுகத்தை காட்டாயோ !
கர்மமே கண்ணென்று ;
களைத்துப்போன உனைக்கண்டு ;
கடல் அன்னையும் அழைத்தாலோ !
அலை ஓசை தாலாட்டில் ;
அமைதியாக நீ உறங்க !
"மக்களால் நான்.. மக்களுக்காக நான்"
மறக்க முடியாத கம்பீரமான வார்த்தை !
அன்பை செலுத்த அம்மா நீ ;
அருகில் வந்து ஆறுதலும் தாராயோ ?
நெஞ்சம் மட்டும் ஆறவில்லை !
நினைத்தும் பார்க்க முடியவில்லை !
நீ இல்லாத நாட்களை !
கனவிலாவது வந்து - எங்கள் ;
கண்ணீரை துடைத்துவிட்டு !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...