2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பணத்தின் மறுபக்கம்: கே. அசோகன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

அச்சடித்த காகிதமே  அழகான பணமானது!
எச்சில் தொட்டு எண்ணுகையில் சுகமானது!
பச்சிளம் குழந்தையின் பசியாற துணையானது!
பச்சைமட்டை ஓலையின் பயணத்திற்கும் பயனானது!

வாசல்வந்து தலைவணங்கி வாக்குகளின் செலவாவது
தேசநலன் காத்திருக்கும் திடவீரர்களுக்கோ சிறிதாவது!
ஆசையசையாய் சேர்த்திட அலையளவுக்கு நிகரானது!
மோசம்போன பின்னாலே முணுமுணுத்து புலம்பலாக்குவது!

கடுகு-டப்பாவில்  கட்டாகத்தான் கணக்காய் ஒளிந்திருப்பது!
சட்டெனவே வருகின்ற செலவுகளுக்கும் தோழனாவது!
கட்டுக்கட்டாய் காகிதங்களாய் மூட்டையாய் அடைக்கலமானது!
தட்டேந்தும் பிச்சைக்காரரிடமும் தாராளமாய்  இருப்பது

ஒரேநாளில் செல்லாதென்று ஒளிந்தே கொண்டது!
மறுநாளில் வங்கிவாசல்களில் மந்தையாக நிற்கவைத்தது!
ஆறேழு கோடிகள் கடனெனினும் அரவணைத்து கொள்வது!
ஆறுலட்சம் நிலுவையெனின் அமீனாவை வரவழைப்பதுவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.