2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பணத்தின் மறுபக்கம்: கவிஞர் " இளவல் " ஹரிஹரன்,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

பணத்திற்கோர் கொம்புமுளைத் தாலே அந்தப்       பணந்தானே பிணமாகும் உண்மை யன்றோ!பணமென்றால் பிணங்கூட வாய்தி றக்கும்       பழமொழியே பணத்தின்ம றுபக்கங் காட்டும்.பணமென்றால் பத்துஞ்செய் யுமெனப் போற்றும்       பகட்டொன்றே இருபக்க நிலையைக் காட்டும்.பண்த்தாலே ஆகாத தேது மில்லை      பணத்தாலே சாகாத தேது மில்லை.பணமொன்றே மனிதர்க்கு வேண்டும் நெஞ்சப்       பாசப்பி ணைப்பெல்லாம் பொய்யாய் போகும். பணத்தாலே நட்புறவும் பகையாய் மாறும்.       பழம்பெருமை யாவுமொரு புகையாய்ப் போகும்.பணமென்றால் நாப்பிறழ்ந்து மெய்யும் பொய்யாய்       பாவத்தின் படுகுழியில் தள்ளிப் பார்க்கும்.பணமென்றால் உலகத்தில் பத்துஞ் செய்யும்.       பாதாள வேதாளம் மட்டும் பாயும்.காசா லேசாஎன்ற சான்றோர் சொல்,அக்       காசாலே சா, என்றே எடுத்துக் காட்டும்,காசென்றால் குற்றமென்ற பொருளிற் சொல்வர்,       காசில்லை என்றாலே குறைவாய்ப் பேசும்.காசுக்குத் தருகின்ற மதிப்பைக் கூட       காசினியில் வாழ்வோர்க்குத் தருவ தில்லை.காசேதான் கடவுளாகிப் போன பின், அக்       கடவுளுக்கும் காசாசை வந்த தன்றோ!                       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.