2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

02.02.1790: கட்ட பொம்மன் பாளையக்காரராக முடி சூடிய தினம் இன்று!

ஆங்கிலேயர் ஆட்சியை வெறுத்த, வீரபாண்டிய கட்ட பொம்மன், பாளையங்குறிச்சிக் கோட்டையின் மன்னராக முடி சூடிய தினம் இன்று.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

DIN

ஆங்கிலேயர் ஆட்சியை வெறுத்த, வீரபாண்டிய கட்ட பொம்மன், பாளையங்குறிச்சிக் கோட்டையின் மன்னராக முடி சூடிய தினம் இன்று.

1760ம் ஆண்டு, தெலுங்கு வம்சாவழியைச் சேர்ந்த, ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு பாளையங்குறிச்சியில் ஜனவரி 3ம் நாள் பிறந்தார் கட்ட பொம்மன். இவரது இயற்பெயர் வீரபாண்டியன் என்பதாகும். ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர்.

இவரது துனைவியார் பெயர், வீரசக்கம்மாள். இவர்களுக்கு பிள்ளைப் பேறு கிட்டவில்லை. இவர் அரசப் பொறுப்பிற்கு வரும் போது இவருக்கு வயது 30. இவரது ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்கள், இந்தியாவை வசப்படுத்தும் விதமாக, சிற்றரசர்களிடம் வரி வசூலித்து வந்தனர்.

இதனை முற்றிலுமாக எதிர்த்து நின்ற வீரபாண்டிய கட்ட பொம்மனிடமிருந்து ஆங்கிலேயர்களால் வரி வசூலிக்க முடியவில்லை. இதனால் 1797ம் ஆண்டு, ஆங்கிலேய தளபதி ஆலன் துரை தலைமையில், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை மீது போர் தொடுத்தது கிழக்கிந்திய கம்பெனி. இந்தப் போரில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களை புறமுதுகு காட்டி ஓடவிட்டார். பொம்மனை வீரத்தால் வெற்றி கொள்ள முடியாத நிலையில், தந்திரமாக சந்திக்க அழைத்து கைது செய்ய திட்டமிட்டது கிழக்கிந்திய கம்பெணி.

வெகு நாட்கள் அலைக்கழித்தப் பின் செப்டம்பர் 10, 1798ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெணியின் மாவட்ட கலெக்டர் ஜாக்சன் கட்ட பொம்மனைச் சந்தித்து கைது செய்ய முயன்றார். ஆனால் இதில் சுதாரித்துக் கொண்ட பொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக்குச் சென்றார்.

1799ம் ஆண்டு மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி தாக்குதலுக்குள்ளானது. இந்த தாக்குதலில் வீரபாண்டிய கட்ட பொம்மன் கோட்டையை விட்டு வெளியேற நேர்ந்தது. அதே ஆண்டு, அக்டோபர் 16ம் நாள் கிழக்கிந்திய கம்பெனியால் கட்ட பொம்மன் கைது செய்யப்பட்டு தூக்கிலடப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.