சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

உத்தமபாளையத்தில் தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் திமுக பிரமுகர் செல்லப்பாண்டியும், உடன் சென்ற அவரது தோழியும் பலி

News image
பலி- பிரதிப் படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 2:58 am

இணையதளச் செய்திப் பிரிவு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் புறவழிச் சாலையில் தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் திமுக பிரமுகரும், உடன் சென்ற அவரது தோழியும் உயிரிழந்தனர்.

சின்னமனூர் நகர இளைஞரணி அமைப்பாளர் செல்லப்பாண்டி (36). சீலையம்பட்டி கீழப்புலானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இவரும் மற்றும் உத்தமபாளையத்தை சேர்ந்த தோழி வைத்தீஸ்வரி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சின்னமனூரில் இருந்து உத்தமபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

உத்தமபாளையம் புறவழிச் சாலையை கடந்து செல்ல முயன்றபோது, கம்பத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.

இது பலத்த காயமடைந்த தோழி வைத்தீஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திமுக பிரமுகர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம்னி பேருந்து ஓட்டுனர் திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.