2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

05.04.1946: முன்னாள் துணைப்பிரதமர் ஜகஜீவன் ராம் பிறந்த தினம் இன்று! 

பாபு எனப் பிரியமாக அழைக்கப்படும் ஜகஜீவன் ராம் 1946-ல் பிஹார் மாநிலத்தில் போஜ்பூர் மாவட்டம் சந்தவா கிராமத்தில் ...

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

DIN

பாபு எனப் பிரியமாக அழைக்கப்படும் ஜகஜீவன் ராம் 1946-ல் பிஹார் மாநிலத்தில் போஜ்பூர் மாவட்டம் சந்தவா கிராமத்தில் சாமர் எனும் தலித் சமூகத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். குழந்தைப் பருவம் முதலே தீண்டாமையின் கோர முகத்தைப் பல தருணங்களில் எதிர்கொண்டவர். பின்னாளில் பிரதமராகும் வாய்ப்பு நான்கு முறை முறியடிக்கப்பட்டவர். ஆனால், 1977-ல் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் துணைப் பிரதமர் நிலைக்கு உயர்ந்தவர். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்ட முன்வடிவக் குழுவில் உறுப்பினராகச் செயல்பட்டவர்

தனது 23 வயதில் காங்கிரஸில் இணைந்த ஜகஜீவன் ராம் காந்தியடிகளின் சத்தியாகிரகத்தை முழுவதுமாகப் பின்பற்றத் தொடங்கினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். 1950 முதல் அடுத்த 36 ஆண்டுகளுக்குச் சட்ட மன்ற உறுப்பினராகச் செயல்பட்டார். கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைந்து வழிபாடு நடத்தவும் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும் உரிமைகோரிப் போராடினார். தலித் பிரதிநிதியாக பிஹார் மாகாண அரசுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அரசியல் நிர்ணயச் சபையில் உறுப்பினராக இருந்து, சமூக நீதி அரசியல் சட்டத்தில் இடம் பெற அல்லும் பகலும் பாடுபட்டார். 1977 முதல் 1979 வரை இந்தியத் துணைப் பிரதமர் பொறுப்பு வகித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.