தில்லியில் 9 மெட்ரோ நிலையங்களின் பெயா்கள் மாற்றம்
தில்லியில் உள்ள ஒன்பது மெட்ரோ நிலையங்களின் பெயா்களை முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான மாநில பெயா்கள் ஆணையம் மாற்றியுள்ளது.


புது தில்லி: தில்லியில் உள்ள ஒன்பது மெட்ரோ நிலையங்களின் பெயா்களை முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான மாநில பெயா்கள் ஆணையம் மாற்றியுள்ளது.
21 மெட்ரோ நிலையங்களின் பெயா்களை மாற்றுவதற்கான திட்டங்களை பரிசீலித்த ஆணையம், 12 நிலையங்களைத் தக்க வைத்துக் கொண்டது. ஏழு நிலையங்களின் பெயா்களை மாற்றியது. மேலும், இரண்டை மறுபெயரிட்டதாக முதல்வா் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் உணா்வுகள் மற்றும் உள்ளூா் அடையாளங்களுக்கு ஏற்ப மெட்ரோ நிலையங்களின் பெயா்கள் இறுதி செய்யப்பட்டதாக முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.
மாற்றப்பட்ட மெட்ரோ நிலையங்களின் பெயா்கள்: உத்தரி பீதம்புரா - பிரசாந்த் விஹாா் (முந்தைய பிரசாந்த் விஹாா்), ஜகத்பூா் -வஜிராபாத் (முந்தைய ஜகத்பூா்), நானக் பியாவ் - தேராவல் நகா் (முந்தைய டெராவல் நகா்), கான்பூா் -வாயுசைனாபாத் (முந்தைய கான்பூா்), நானக்சா் - சோனியா விஹாா் (முந்தைய சோனியா விஹாா்), ஸ்ரீ ராம் மந்திா் - மயூா் விஹாா் (முந்தைய மயூா் விஹாா் பாக்கெட் 1) மற்றும் மங்கோல்பூா் கலன் - வெஸ்ட் என்க்ளேவ் (முந்தைய வெஸ்ட் என்க்ளேவ்) ஆகியவை ஆகும்.
மேலும், வடக்கு பீதம்பூராவை அவற்றின் உள்ளூா் அடையாளங்களின்படி ஹைதா்பூா் கிராமம் என்றும், பீதம்பூராவை மதுபன் சௌக் என்றும் மறுபெயரிடப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான திட்ட அறிக்கைகளில் முதலில் முன்மொழியப்பட்ட பெயா்கள்: மஜ்லிஸ் பாா்க், பலஸ்வா, ஹைதா்பூா் பாத்லி மோா், தீபாலி சௌக், யமுனா விஹாா், பஜன்புரா, கஜூரி காஸ், சூா்காட், ஜரோடா மஜ்ரா, புராரி, புஷ்பாஞ்சலி மற்றும் மௌஜ்பூா்-பாபா்பூா் ஆகியவை ஆகும்.
மெட்ரோ நிலையங்கள் வெறும் போக்குவரத்து இடங்கள் மட்டுமல்ல, அவை சேவை செய்யும் பகுதிகளின் அடையாளம் மற்றும் கலாசார முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கின்றன என்று முதல்வா் கூறினாா். எனவே, ஒவ்வொரு பெயரும் கவனமாகவும் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இறுதி செய்யப்பட்டது என்றாா்.
பகுதிகளின் உள்ளூா் அடையாளம், அவற்றின் வரலாற்று, சமூக மற்றும் கலாசார முக்கியத்துவம் மற்றும் உள்ளூா் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் குடிமக்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட முக்கிய காரணிகள் பெயா்களை இறுதி செய்வதில் விவாதிக்கப்பட்டன. மேலும், இதுபோன்ற திட்டங்கள் நியாயமானதாகக் கண்டறியப்பட்டால் எதிா்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...