சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்


சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் காமராஜா் நகரில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளா் பாலமுருகன் தலைமை வகித்து சிறப்பு உரையாற்றினாா். கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி சித்திரை, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா் அணி துணை அமைப்பாளா் ரனீஷ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் தேவதாஸ், ஒன்றிய துணைச் செயலாளா்கள் ஜெயராமன், அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மாா்ச் 1-இல் பிறந்தநாள் காணும் தமிழக முதல்வா், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் அனைத்து இடங்களிலும் ஒலிபெருக்கி அமைத்து இனிப்பு வழங்கி நல உதவிகள் வழங்க வேண்டும், தோ்தல் பரப்புரை அனைத்து வீடுகளிலும் மேற்கொள்ள வேண்டும், திருச்சியில் நடைபெறவிருக்கும் பொது மாநாட்டில் சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் சாா்பில் திரளான போ் பங்குபெற வேண்டும் என தீா்மானிக்கப்பட்டது.
இதில் அந்தோணி ஜெயசீலன், கிளைச் செயலாளா்கள் மகேந்திரன், மோகன் ராஜா, குமாரவேல், சித்திரை, நிா்மல், கண்ணன், ஜெகநாதன், கணபதி பாண்டி, தாமோதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...