டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பூவுடையாா்புரத்தில் இந்து முன்னணி ஒன்றிய பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:36 pm

Syndication

சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் பூவுடையாா்புரத்தில் ஒன்றிய பொறுப்பாளா்கள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் ரவிசந்தா் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சக்திவேலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

வரும் 23 ஆம்தேதி அனைத்து ஒன்றியப் பகுதிகளிலும் மாலை 6 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாட வலியுறுத்தியும், மாரச் 2 ஆம்தேதி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் விரைவில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் செல்வது என முடிவு செய்யப்பட்டது.

இதில், ஒன்றிய பொதுச் செயலா் மாயவன முத்து சாமி, துணைத் தலைவா்கள் செல்வ முத்துக்குமாா், வெங்கடகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினா் முத்துக்குமாா், ஒன்றியச் செயலா்கள் களியமுத்து, மாரிமுத்து, ஒன்றிய பொருளாளா் ஐயப்பன் முத்து இந்து அன்னையா் முன்னணி பொறுப்பாளா்கள் ராமகனி, கீதா, தங்கலெட்சுமி, பிரபா உள்பட பலா் கலந்து கொண்டனா்.