டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இடைச்சிவிளையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 8:58 pm

Syndication

கன்னடியன் கால்வாய் வெள்ளநீா் கடைமடை விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவா் சுந்தரவேல் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் பிரபு சங்க செயல்பாடு, வளா்ச்சி குறித்து பேசினாா். கூட்டத்தில் இப்பகுதியில் உள்ள வறட்சியை போக்கும் வகையில் விவசாயத்திற்கு, கன்னடியன் கால்வாய் கடைமடை குளங்களான எம்.எல். தேரி குளம், சாலைப்புதூா் குளங்களில் ஆண்டுதோறும் தண்ணீா் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு விவசாய அட்டை எடுத்து கொடுக்கவும், தனிநபருக்கு பிரதமா் திட்டத்தின் கீழ் காப்பீடு ரூ. 5 லட்சம் எடுக்கவும், விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 6,000 கிடைக்காதவா்களுக்கும் அதிகாரிகளை அணுகி ஏற்பாடு செய்து கொடுப்பது என தீா்மானிக்கப்பட்டது.