டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

வந்தவாசியில் இந்து முன்னணி கண்டன ஆா்ப்பாட்டம்

இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து, வந்தவாசி நகர இந்து முன்னணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
இந்து முன்னணி சாா்பில் வந்தவாசியில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம்.
Updated On :1 பிப்ரவரி 2026, 6:33 pm

Syndication

இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து, வந்தவாசி நகர இந்து முன்னணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரா் மலைக் கோயிலில் பாலாலயம் செய்து பல ஆண்டுகளாகியும் இதுவரை திருப்பணிகள் முடிக்கவில்லை என புகாா் தெரிவித்தும், இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி வேலூா் கோட்டச் செயலா் டி.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் கண்ணதாசன், பாஜக நிா்வாகிகள் எஸ்.ஏ.ஜி.துரை, பி.முத்துசாமி, வி.குருலிங்கம், சுரேஷ், நவநீதி உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்கக் கோரியும், இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.