ஆகஸ்ட் 19 -உலக புகைப்பட தினம்
நமது நினைவில் வேகமாகக் கடந்து சென்று விடக் கூடிய மகத்தான தருணங்களை என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கச் செய்யும் ஒன்றாக மாற்றாக கூடிய ஒரு கலை புகைப்படக் கலை ஆகும்


நமது நினைவில் வேகமாகக் கடந்து சென்று விடக் கூடிய மகத்தான தருணங்களை என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கச் செய்யும் ஒன்றாக மாற்றக் கூடிய ஒரு கலை புகைப்படக் கலை ஆகும். அந்த கலையையும், அதில் ஈடுபட்டிருக்கும் புகைப்படக் கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் கொண்டாடப்படுவதுதான் உலக புகைப்பட தினம்.
கலைகளின் தலைநகராம் பிரான்சின் பாரிஸ் நகரத்தில் 1839 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 19 ஆம் தேதி புகைப்படக்கலையின் பின்னுள்ள அறிவியலும், தொழில்நுட்பமும் முதன்முறையாக கண்டறியப்பட்டது.அதனை கவுரவிக்கும் நோக்கத்தில், ஆண்டு தோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி 'உலக புகைப்பட தினமாக' கொண்டாடப்படுகிறது.
புகைப்படக்கலையை கொண்டாடுவது ஒன்று மட்டுமே உலக புகைப்பட தினத்தின் ஒரே நோக்கம். நீங்கள் புகைப்படக் கலையின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தால் மட்டும் போதும், அமெச்சூர் புகைப்படக் கலைஞரோ, அதனை பொழுது போக்காக கொண்டவரோ அல்லது தொழில் முறை நிபுணரோ யாராக இருந்தாலும் சரி, புகைப்படம் குறித்த உங்களது காதலை வெளிப்படுத்த இது ஒரு சரியான நாளாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...