நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.

News image
நிலநடுக்கம்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:55 am

தினமணி செய்திச் சேவை

நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.

தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 7:31 மணிக்கு சங்குவாசபா மாவட்டத்தின் ரிதக் பகுதியில் ரிக்டர் அளவில் 4.1ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே 475 கிமீ தொலைவில் சங்குவாசபா உள்ளது.

அண்டை மாவட்டங்களான டேப்லேஜங் மற்றும் போஜ்பூரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை.

முன்னதாக ஜனவரி 11 ஆம் தேதி, லம்ஜங் மாவட்டத்தின் பன்சர் அருகே ரிக்டர் அளவில் 3.9ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகின் அதிக நிலநடுக்க பாதிப்புக்குள்ளான நாடுகளில் நேபாளம் 11ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.