

வடக்கு பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
வடக்கு மற்றும் வடமேற்கு பாகிஸ்தானின் சில பகுதிகளில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4ஆகப் பதிவானதாக இஸ்லாமாபாத்தின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக உடனடித் தகவல் இல்லை. உள்ளூர் நேரப்படி காலை 9:30 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது, அட்டோக்கின் புர்ஹானுக்கு வடகிழக்கே 11 கிமீ தொலைவிலும் 14 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது.
மேலும் கைபர் பக்துன்க்வாவின் சில பகுதிகளிலும், இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணங்களின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் சனிக்கிழமை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக வெள்ளிக்கிழமை பெஷாவர் மற்றும் இஸ்லாமாபாத் உட்பட பல நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இமயமலையில் வடக்கு பாகிஸ்தான் அமைந்திருப்பதால், அங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.
பாகிஸ்தானில் 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 74,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
summary
A 4.4 magnitude earthquake jolted parts of north and northwestern Pakistan on Saturday, the second tremor to hit the country in as many days.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

அருணாசலில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

பாகிஸ்தான்: 24 மணிநேரத்தில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் திருமண நிகழ்வில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 7 பேர் பலி
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


