டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 10:32 am

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 13 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

மேலும நிலநடுக்கத்தின் மையப்பகுதி மாகாணத்தின் குஸ்தார் நகரத்திலிருந்து வடகிழக்கே 86 கிமீ தொலைவில் இருந்தது என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக காலை 5.52 மணிக்கு குஸ்தாருக்கு தென்கிழக்கே 75 கிமீ தொலைவில் 33 கிமீ ஆழத்தில் 3.8 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

பலுசிஸ்தானில் உள்ள ஜால் மாக்சி, ஜாஃபராபாத் மற்றும் நசிராபாத் ஆகிய பகுதிகளிலும் சிந்து மாகாணத்தின் பல மாவட்டங்களிலும் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது.

பாகிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 74,000 க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.