டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பேட்டிங்கில் தடுமாறும் நேபாளம்..! சூப்பர் 8 சுற்றுக்கான முனைப்பில் மே.இ.தீ. அணி!

டி20 உலகக் கோப்பையின் 25-ஆவது போட்டி குறித்து...

News image
மே.இ.தீ., நேபாளம் அணிகளின் கேப்டன்கள். - படம்: ஐசிசி
Updated On :15 பிப்ரவரி 2026, 6:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையின் 25-ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

நேபாளத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றால், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமென்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை வாக்னடேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

நேபாளம் அணி 8 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் எடுத்துள்ளது.

ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். குரூப் சி பிரிவில் 4 புள்ளிகளுடன் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தப் போட்டியில் வென்றால், சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

2 போட்டிகளில் தோல்வியுற்ற நேபாளம் அணி முதல் வெற்றிக்காகப் போராடி வருகிறது.

summary

West Indies opt to bowl against nepal, Windies will make super it T20 world cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.