டேரன் சமி தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி குரூப் சுற்றில் ஒரு போட்டியிலும் வெல்லாமலே, 2012 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வைத்தே வீழ்த்தி கோப்பையை வென்றது.
சுமார் 33 ஆண்டுகளாக உலகக் கோப்பையே வெல்லாமல் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இந்த (2012) டி20 உலகக் கோப்பை புத்துயிர்ப்பாக அமைந்தது.
33 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் உலகக் கோப்பை
1970 - 80களில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணி 1990களில் சற்று பின்னடைவைச் சந்தித்தது.
ஒருநாள் உலகக் கோப்பையை 1975, 1979-ஆம் ஆண்டுகளில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி 1983-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில், இந்தியாவிடம் தோல்வியுற்றது.
அதன்பிறகு 30 ஆண்டுகளில் அந்த அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறாமல் இருந்த நிலையில், 2012 டி20 உலகக் கோப்பையை வென்று அந்த நாட்டில் மீண்டும் கிரிக்கெட்டை புத்துயிர் பெறச் செய்தது என்றாலும் மிகையாகாது!
2012 உலகக் கோப்பை வென்றது எப்படி?
குரூப் சுற்றில் அதிர்ஷ்டம்
குரூப் பி-ல் ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து இருந்தன.
முதல் போட்டி - ஆஸ்திரேலியாவுடன் தோல்வி.
2ஆவது போட்டி - அயர்லாந்துடன் மழை. அதனால் டிரா ஆனது.
அயர்லாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளை விட மோசமாக விளையாடியதால், நெட் ரன் ரேட் அடிப்படையில் சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வானது.
இந்த அதிர்ஷ்டம் முதல் டி20 உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு உதவியிருக்கிறது.
சூப்பர் 8 சுற்றில் போராட்டம்
சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணி குரூப் இ பிரிவில் இருந்தது. இந்தப் பிரிவில் இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இருந்தன.
இந்த சூப்பர் 8 சுற்றில் இலங்கையிடம் மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியுற்றதும் இறுதியில் அதே அணியை வீழ்த்தியதும் சுவாரசியமான வரலாறாக அமைந்துள்ளது.
முதல் போட்டி - இங்கிலாதுடன் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2-ஆவது போட்டி - இலங்கையுடன் படு தோல்வி.
3-ஆவது போட்டி - நியூசிலாந்துடன் போட்டி டிரா ஆனது. பின்னர் சூப்பர் ஓவரில் வென்றது.
இந்தப் பிரிவில் இருந்து இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றுமொரு பிரிவில் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதியில் அபாரம்
ஆஸ்திரேலியாவுடன் மோதிய மே.இ.தீ. அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 205/4 ரன்கள் குவித்தது.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 16.4 ஒவர்களில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மே.இ.தீ. அணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தப் போட்டியில் கிறிஸ் கெயில் 75 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். ரவி ராம்பால் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
மற்றுமொரு அரையிறுதியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டியில் சம்பவம்
இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீ. அணியின் கேப்டன் டேரன் சமி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
சார்லஸ், கெயில் தொடர்க்க வீரர்களாகக் களமிறங்கி 0, 3 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். மார்லன் சாமுவேல்ஸ் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழப்பார். கேப்டன் சமி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 26 ரன்கள் எடுப்பார்.
சிறப்பாக பந்துவீசிய அஜந்தா மென்டீஸ் 4 விக்கெட்டுகள் எடுத்து மே.இ.தீ. அணியை 137/6 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார்.
எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தில்ஷன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
ஜெயவர்தனே 33, சங்ககாரா 22, நுவான் குலசேகரா 26 ரன்கள் எடுக்க, மற்ற 7 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
சுனில் நரைன் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இருந்தும் ஆட்ட நாயகனாக மார்லன் சாமுவேல்ஸும், தொடர் நாயகனாக ஷேன் வாட்சனும் தேர்வானார்கள்.
இலங்கை அணி தனது சொந்த மண்ணிலேயே மண்ணைக் கவ்வியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல்முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது சரித்தரம் படைத்தது!
(தினமணி கருவூலத்தின் உதவியுடன்...)
summary
After 33 years, the West Indies team won the World Cup..! Winner of 2012 T20 world cup!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

6, 6, 6, 6.. கார்லஸ் பிராத்வெய்ட் ருத்ரதாண்டவம்.. மே.இ.தீவுகளின் மறக்க முடியாத உலகக் கோப்பை! 2016 ரீவைண்ட்!!

2026 டி20 உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளிலும் வென்ற மே.இ.தீ. அணி!

பேட்டிங்கில் தடுமாறும் நேபாளம்..! சூப்பர் 8 சுற்றுக்கான முனைப்பில் மே.இ.தீ. அணி!

யு19 உலகக் கோப்பை: வாழ்வா - சாவா போட்டியில் மே.இ.தீ!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


