போர்ச் சூழலால் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் தாயகத்துக்குச் செல்ல முடியாத சூழல் உருவாகி வருகிறது.
டி20 உலகக் கோப்பையில் இருந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியினர வெளியேறியும் தங்களது சொந்த நாட்டிற்குச் செல்ல முடியாமல் இந்தியாவிலேயே தங்கி வருகிறார்கள்.
சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்றதால், மேற்கிந்தியத் தீவுகள் அணி டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.
இந்தத் தோல்விக்குப் பிறகு, சொந்த நாட்டிற்கு செல்ல முடியாத அளவுக்கு விமானங்கள் பலதும் ரத்து செய்யப்பட்டன. ஈரான் - இஸ்ரேல் போரின் காரணமாக இந்தியாவிலேயே தங்கிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி ஒவ்வொரு நாளும் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
இன்னும் 24 மணி நேரத்தில் வீரர்கள் தாயகத்துக்கு திரும்புவார்கள் என சிடபுள்யூஐ (கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ்) தெரிவித்துள்ளது.
ஏழாவது நாளில் சமி அமைதியாகிவிட்டார் என ரசிகர் கிண்டலாகப் பதிவிட அதற்குப் பதிலளித்த சமி, “மகிழ்ச்சி வருகிறதென நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
ஐசிசியும் இந்த விஷயத்தில் தலையிட்டு, பல்வேறு நாடுகளுடன் பேசி வந்தது. பல வளைகுடா நாடுகளில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளதால் இந்தத் தாமதம் எனக் கூறப்பட்டுள்ளது.
Summary
Daren Sammy desperately waiting for 'joy to come' as West Indies remain stuck in India after exit t20 world cup 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
மே.இ.தீவுகள் அணி வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல்! மத்திய கிழக்கில் பதற்றம் எதிரொலி!!

அதிரடியும் அசுர பலமும்... இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கான மெய்நிகர் காலிறுதியில் வெல்லப்போவது யார்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


