டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

2026 டி20 உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளிலும் வென்ற மே.இ.தீ. அணி!

இத்தாலிக்கு எதிராக வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி குறித்து...

News image
மேற்கிந்தியத் தீவுகள் அணியினர். - படம்: ஐசிசி
Updated On :19 பிப்ரவரி 2026, 9:22 am

இணையதளச் செய்திப் பிரிவு

இத்தாலிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலமாக டி20 உலகக் கோப்பையின் லீக் சுற்றில் அனைத்திலும் வென்று மே.இ.தீ. அணி அசத்தியுள்ளது.

டாஸ் வென்ற இத்தாலி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் இத்தாலியின் பந்துவீச்சுக்கு மிகவும் தடுமாறி விளையாடினார்கள்.

இருந்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது. இதில் அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 75 ரன்கள் குவித்தார்.

அடுத்து விளையாடிய இத்தாலி அணி 18 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷமர் ஜோசப் 4, மேத்திவ் ஃபோர்ட் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஷாய் ஹோப் தேர்வானார். லீக்கில் 4 போட்டிகளிலும் வென்றுள்ள மே.இ.தீ. அணி சூப்பர் 8 சுற்றில் இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே உடன் மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.