டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஹேமமாலினி வீட்டில் புதுமுகம்!

ஹேமமாலினியைப் பார்க்க நான் சென்றிருந்தபோது அவர் எங்கேயோ கிளம்பிக் கொண்டிருந்தார். ஒரு சிறு புன்னகை

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:11 pm

உமா ஷக்தி.

ஹேமமாலினியைப் பார்க்க நான் சென்றிருந்தபோது அவர் எங்கேயோ கிளம்பிக் கொண்டிருந்தார். ஒரு சிறு புன்னகை. ‘அம்மாவைப் பாருங்க!’ என்று சில வார்த்தைகள் – கிளம்பி விட்டார் ஹேமா. ஏனெனில் ஹேமமாலினி வீட்டில் எல்லாமுமாக இருப்பவர் அவர் தாயார் ஜெயா சக்கரவர்த்திதான்.

கைக்கு நடுவே ஒரு அழகான டம்பப் பையைச் சுழற்றிக் கொண்டே அவர் தன் வீட்டுக்கு வந்தவர்களிடம் பேசிய பாங்கு, உட்கார்ந்த கம்பீரம் ஆகியவற்றை நான் கவனித்த போத, ஹேமாவுக்கு அகில இந்தியப் புகழ் கிடைத்ததற்கு இந்த அம்மாள்தான் காரணம் என்று என்னால் யூகிக்க முடிந்தது.

‘இருங்க!’ என்று சொல்லிவிட்டு ஹேமாவின் அன்னையும் காரில் ஏறி எங்கேயோ போய்விட்டார்! ஹேமாவும் இல்லாமல், ஹேமாவின் அம்மாவும் இல்லாமல் நான் மட்டும் தனியாக எதற்காக உட்கார்ந்திருக்க வேண்டும் என்று யோசித்துவிட்டு, எழுந்து போய் விடலாமா என்ற முடிவுக்கு வந்த போது சுடச்சுட காபியை எடுத்துக் கொண்டு சிவந்த மேனி படைத்த ஒரு அம்பி (பாலக்காடு போலிருக்கிறது) ‘சாப்பிடுங்கோ!’ என்று கொச்சையான பிராமணத் தமிழில் உபசரித்தான்.

அதோடு அவன் என்னை விட்டு விடவில்லை. ‘மெட்ராஸில் என்னைப் பார்த்திருப்பேளே? தேவர் பிலிம்ஸில் கூட எனக்கு ஆக்டிங் சான்ஸ் தர்ரதாகச் சொல்லியிருக்கா.’ இப்படிச் சொல்லிவிட்டுத் தன் சட்டைப்பையில் வைத்திருந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை என்னிடம் நீட்டினான். ஹேமமாலினி வீட்டில் இப்படி ஒரு புது முகம். காபி வாசனை கமகமக்கப் புகுந்து கொண்டிருப்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது.

ரேவதிகாந்தன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.