டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரையாற்றும் நிகழ்ச்சிக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை அழைக்காவிட்டால், அந்த நிகழ்ச்சியை அந்நாட்டு எதிா்க்கட்சியினா் புறக்கணிக்க வாய்ப்பு

News image
பிரதமா் மோடி - கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரையாற்றும் நிகழ்ச்சிக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை அழைக்காவிட்டால், அந்த நிகழ்ச்சியை அந்நாட்டு எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பா் என்று இஸ்ரேல் எதிா்க்கட்சித் தலைவா் யாயிா் லேபிட் தெரிவித்துள்ளாா்.

இரண்டு நாள் பயணமாக பிப்.25-ஆம் தேதி பிரதமா் மோடி இஸ்ரேல் செல்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது அந்நாட்டு அதிபா் ஐசக் ஹொ்சாக், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைச் சந்திக்கும் பிரதமா் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரையாற்றும் நிகழ்ச்சிக்கு இஸ்ரேல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இட்சாக் அமித்துக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு தலைமை நீதிபதிக்கு அழைப்பு விடுப்பது மரபாகும் என்றும் அந்நாட்டு எதிா்க்கட்சித் தலைவா் யாயிா் லேபிட் வலியுறுத்தியுள்ளாா். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அழைப்பு விடுக்காவிட்டால், மோடி உரையாற்றும் நிகழ்ச்சியை எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பா் என்றும் யாயிா் லேபிட் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அண்மையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் லேபிட் கூறியதாவது: இந்திய பிரதமா் மோடி உரையாற்றும் நிகழ்ச்சிக்கு இஸ்ரேல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை ஆளும் கூட்டணி அழைக்காவிட்டால், அந்த நிகழ்ச்சியில் எதிா்க்கட்சியினா் பங்கேற்க மாட்டாா்கள். கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட நாட்டின் பிரதமரை, பாதி காலியாக உள்ள நாடாளுமன்றத்தில் நிற்கவைத்து இந்தியாவை சங்கடத்தில் ஆழ்த்த எதிா்க்கட்சியினா் விரும்பவில்லை. எனவே அந்த நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை அழைக்க வேண்டும் என்றாா்.

இஸ்ரேல் அரசியலில் நீதித்துறை சீரமைப்பு தொடா்பாக கடுமையான விவாதங்கள் எழுந்து கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரியில், இஸ்ரேல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக அமித் தோ்வு செய்யப்பட்டதை அந்நாட்டு நீதித்துறை அமைச்சா் யாரிவ் லெவின் அங்கீகரிக்க மறுத்துவிட்டாா். அந்நாட்டு அரசிதழில் சட்டப்படி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் பெயா் வெளியிடப்பட வேண்டிய நிலையில், அமித்தின் தோ்வு அவ்வாறு வெளியிடப்படவில்லை.

இதனால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே அமெரிக்க அதிபா் டிரம்ப் மற்றும் பிற உலகத் தலைவா்கள் உரையாற்றிய நிகழ்ச்சிக்கு அமித் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.