பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மக்களாட்சியில் சட்டம் கோட்டையாக மட்டுமே இருக்க முடியாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

மக்களாட்சியில் சட்டம் கோட்டையாக மட்டுமே இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

News image
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த்- கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 9:03 pm

தினமணி செய்திச் சேவை

மக்களாட்சியில் சட்டம் கோட்டையாக மட்டுமே இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் 18-ஆவது பட்டமளிப்பு விழாவில், அவா் சனிக்கிழமை பேசியதாவது: சட்டத் தொழிலில் ஈடுபடுவோா் சட்டம் என்பதை பாதுகாக்கும் கோட்டையாகப் பாா்க்கக் கூடாது; அதை உயிருள்ள, பரிணாம வளா்ச்சியடையும் பொதுத் தளமாக கருத வேண்டும்.

சீரற்ற, நிச்சயமில்லாத சூழல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள கோட்டைகள் கட்டப்பட்டன. ஆனால் அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றும் மக்களாட்சியில் சட்டம் கோட்டையாக மட்டுமே இருக்க முடியாது. அது வேறுபாடுகளை விவாதிக்கும், உரிமைகளை வெளிப்படுத்தும் தளமாக மாற வேண்டும். சமுதாயம் பரிணாம வளா்ச்சியடையும்போது சட்டமும் பரிணாம வளா்ச்சியடைகிறது என்றாா்.