பாக்கியராஜின் கைப்பெட்டி
பாக்கியராஜ் ஒரு படப்பிடிப்பிற்காக கோவையை அடுத்து வெள்ளங்கோஇல் கிராமத்திற்குப் போனபோது


பாக்கியராஜ் ஒரு படப்பிடிப்பிற்காக கோவையை அடுத்து வெள்ளங்கோயில் கிராமத்திற்குப் போனபோது எதிர்பாராமல் ஓர் நற்பெயரைத் தேடிக் கொண்டார். அதாவது அங்குள்ள உயர்நிலைப் பள்ளிக்கூடம் ஒன்று, அரைகுறை கட்டிட வேலையோடு நின்றிருப்பதைக் கண்டு, அது முடிவடைய அவர் 7500 ரூபாய் நன்கொடை வழங்கியதாக நான் கேள்விப்படுகிறேன்.
பள்ளிக்கூடத்திற்கு பாக்கியராஜ் நன்கொடை வழங்கியது மிகவும் பொருத்தம். பட உலகில் அவர் ஒரு கதாநாயக நடிகராகப் புகுந்து, படத்தில் ஒரு பள்ளிக்கூட வாத்தியாராகத் தான் வேடம் புனைந்தார். கையில் ஒரு பெட்டியோடு பஸ்ஸில் இருந்து இறங்கிய அவர், சாலை ஓரத்தில் வழி தெரியாமல் விழித்த காட்சி எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. இன்று பாக்கியராஜின் கைப்பெட்டிப் பண நோட்டுக்களால் நிரம்பி கிடப்பதால் தன்னுடைய ஆரம்ப கால காதபாத்திரத்தை நினைவில் கொண்டுதான் பள்ளிக்கூடத்திற்கு நிதி வழங்கி இருக்க வேண்டும். படப்பிடிப்புக்குப் போன இடத்தில் இப்படி ஒரு நல்ல பெயரை அவர் சம்பாதித்துக் கொண்டு விட்டார். புதிதாகப் புகழும், பணமும் பெற்ற எல்லாக் கலைஞர்களுக்குமே கொடுக்க மனம் வரவேண்டுமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...