டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வடிவுக்கரசி வீட்டில் இளைஞர்கள்!

வடிவுக்கரசி வீட்டிற்குச் சென்றிருந்தபோது, நான்கைந்து இளைஞர்கள் அவருடன் தீவிரமாகத் தர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:10 pm

உமா ஷக்தி.

வடிவுக்கரசி வீட்டிற்குச் சென்றிருந்தபோது, நான்கைந்து இளைஞர்கள் அவருடன் தீவிரமாகத் தர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள்.

மதுரையில் வடிவுக்கரசியின் பெயரில் இருக்கும் ஒரு மன்றத்தின் தலைவர் சலீம், செயலாளர் ரவி, பொருளாளர் காசி மற்றும் எஸ்.எஸ்.பி.ராஜன், எம்.மீனாட்சி சுந்தரம் ஆகியோரே அவர்கள்.

‘கலை இளவரசி வடிவுக்கரசி தலைமை மன்றம்’ எனத் தங்கள் மன்றத்தை அவர் அங்கீகரித்துக் கையெழுத்திட வேண்டும் என்று வடிவுக்கரசியை நச்சரித்துக் கொண்டிருந்தனர்.

‘இதோ பாருங்கள், நான் நடித்து இப்போதுதான் ஆறு படங்கள் வெளியாகியிருக்கின்றன. நான் என்ன சாதித்துவிட்டேன் என்று ‘கலை இளவரசி’ என்று ஒரு பட்டத்தைத் தூக்கிக் கொடுக்கிறீர்கள்? ஒரு நடிகையின் உண்மையான வளர்ச்சிக்கு இந்த மன்றங்களும், இப்படிப்பட்ட பட்டங்களும் உதவிகரமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. கலை உலகில் முதல் படிக்கட்டில் இப்போதுதான் நான் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இன்னும் கடக்க வேண்டிய தூரம் எவ்வளவோ! இப்படிப்பட்ட ஒரு பட்டத்துக்கு தகுதியானவள் என்று நான் என்று நினைக்கிறேனோ அந்த அளவுக்கு உயருகிறேனோ, அப்போது உங்களை நான் அழைத்து உங்கள் எண்ணத்தை நிறைவேற்றுகிறேன். இப்போது என்னை மன்னித்துவிடுங்கள்!’ என்று சொல்லி விட்டுப் போய்விட்டார் வடிவுக்கரசி.

இந்தக் காலத்தில் பட்டம் வேண்டாம் என்கிறாரே, ஒரு சினிமா நடிகை. நம்பத்தான் முடியவில்லை!

-ரமணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.