ராஜா ராஜாதான் - ஏவி.எம்.சரவணன்
பராசக்தி படத்தில் அறிமுகமான போது நடிகர் திலகம் ஏற்படுத்திய பரபரப்பை இசைத் துறையில் இன்று செய்து வருகிறார் இளையராஜா.


பராசக்தி படத்தில் அறிமுகமான போது நடிகர் திலகம் ஏற்படுத்திய பரபரப்பை இசைத் துறையில் இன்று செய்து வருகிறார் இளையராஜா. படத்திற்குப் படம் புது பாணியில் மெட்டமைத்து, வெற்றியைக் குவித்து வருகிறார். இசையில் ராஜாவான இந்த இளையராஜா.
‘அன்னக்கிளி’ படத்தில் கதாசிரியர் பஞ்சு அரணாசலம் மூலம் அரங்கேறிய இவர், இன்று இசை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை-சிறப்பான இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறார்.
எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு அவரது முதல் படம் வெற்றிப் படமாக அமைவது அபூர்வம். இளைய ராஜாவின் முதல் படமே ‘வெள்ளி விழா’ படமாக அமைந்தது மற்றுமொரு தனிச் சிறப்பு.
கர்நாடக இசை – மேல் நாட்டு இசை இரண்டிலும் சிறந்த புலமை பெற்றிருக்கும் இளையராஜா அந்த நாளில் மேடைகளில் மெல்லிசைக் கச்சேரிகளை நடத்தி வந்தார் – தனது சகோதரர்களுடன் சேர்ந்து. ‘பாவலர் பிரதர்ஸ்’ மேடை ஏறாத ஊர்களே இல்லை. மெல்லிசை நிகழ்ச்சிகளை நடத்தாத பெரிய சபாக்களே இல்லை.
அப்போதெல்லாம் மற்ற இசை அமைப்பாளர்களின் பாடல்களை வாசித்த இவர் இப்போது தான் அமைத்த பாப்புலர் பாடல்களைக் கூட மேடையில் வாசிக்க முடிவதில்லை. காரணம் மெல்லிசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான நேரம் இவருக்குக் கிடைப்பதில்லை.
லண்டன் ‘டிரினிடி’ இசைப் பள்ளியில் டிப்ளமோ பெற்றுள்ள ஒரே இசை அமைப்பாளர் நமது ராஜாதான். இதை என் நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
புதிது புதிதாக இசைக்கருவிகளை இவர் கையாண்டு, புதிய ராகங்களைத் தனது இசையில் புகுத்துவது போல, பல புதுப் பாடகர், பாடகிகளையும் தன் இசை அமைப்பில் பாட வைக்கிறார்.
இவரது இந்த முயற்சி பாராட்டுக்குரியது. மிகக் குறுகிய காலத்திலேயே புகழ்ப்பெற்றுவிட்ட ‘இளையராஜா’ – வயதில் இளையவர் – திறமையில் முதிர்ந்தவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...