டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நாடக விமரிசனம் - மகாபாரதத்தில் மங்காத்தா!

நாடகப்பிரியவுக்கே உரிய நகைச்சுவை இருக்கிறது. ஆனால் ஸ்பான் ஹியூமர்களான அவை, மேடையைத் திரை மறைத்த கணத்திலேயே நம் மனத் திரையை விட்டும் அகன்று விடுகிறதே!

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:10 pm

உமா ஷக்தி.

மகாபாரத்ததுக்கும் மங்காத்தாவுக்கும் என்ன சம்பந்தமோ அதே சம்பந்தம்தான் நாடகத்துக்கும் கதைக்கும்.

நாடகப்பிரியவுக்கே உரிய நகைச்சுவை இருக்கிறது. ஆனால் ஸ்பான் ஹியூமர்களான அவை, மேடையைத் திரை மறைத்த கணத்திலேயே நம் மனத் திரையை விட்டும் அகன்று விடுகிறதே!

‘சமூக, சரித்திர,புராண, விஞ்ஞான நாடகம்’ என்று அறிவித்துப் பிரமிப்பை உண்டாக்கினாலும் மிஞ்சுவது ‘இதற்கா பிரமித்தோம்?’ என்ற எண்ணம்தான்.

இதில் கட்டபொம்மனைக் காமெடியனாக்கி, சிவாஜி கணேசன், சக்தி கிருஷ்ணசாமி ஆகியோரின் பெருமைகளை உயர்த்திக் காட்ட முயற்சித்துள்ள அவர்கள், முழுமுதற் காரணமான ம.பொ.சி.யை மறந்துவிட்டது ஏனோ?

நடிப்பைப் பொறுத்தவரை நடிக்கவே தெரியாதவர் எஸ்.வி.சேகர் என்றே கூறலாம். அவ்வளவு இயல்பாக மேடையில் வளைய வருகிறார். ஒருபுறம் சேகர் வருகிறார், ஒரு புறம் சேகர் வாய் வீச்சில் சிரிக்க வைத்தால் மறுபுறம் அந்த நோஞ்சான் கட்டபொம்மன் (பாலன்) கைவீச்சிலேயே சிரிக்க வைத்துவிடுகிறார்!

ஜி.கே.வின் கற்பனை, ‘இப்படியும் ஒரு கற்பனையா?’ என்று கேட்க வைக்கிறது.

இரண்டரை மணி நேரம் சிரிக்கலாம் – தெம்பு உள்ளவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.