டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வெண்ணிற ஆடை மூர்த்தி பற்றி மனோரமா!

வெண்ணிற ஆடை மூர்த்தி நடிச்ச பல படங்கள் பார்த்திருக்கேன். ‘அழியாத கோலங்கள், சமீபத்தில் வந்த

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:13 pm

உமா ஷக்தி.

வெண்ணிற ஆடை மூர்த்தி நடிச்ச பல படங்கள் பார்த்திருக்கேன். ‘அழியாத கோலங்கள், சமீபத்தில் வந்த ‘பன்னீர் புஷ்பங்கள்’ என்னை ரொம்பவும் கவர்ந்தன. ‘அழியாத கோலங்கள்’ படத்தில் சபலபுத்தியுடைய ஒரு கிராமத்து போஸ்ட் மாஸ்டராக அவர் நடித்தார். உண்மையில் மூர்த்தி ரொம்பவும் கூச்சம் உள்ளவர். இவர் காதலித்து மணந்து கொண்ட மணிமாலா மீது இவர் உயிரையே வைத்திருக்கிறார் என்பது என் போன்ற நெருங்கிப் பழகுபவர்களுக்குத்தான் தெரியும். மூச்சுக்கு மூச்சு இவருக்கு மணிமாலாதான். என்னிடம் சாதாரணமாகப் பேசும் போது கூட ‘மணிமாலா சமையல் என்றால் அந்த ருசியே தனிதான் அக்கா’ என்பார். ஷுட்டிங் கொஞ்சம் நேரம் இரவு நீடித்தால், ‘பாவம் மணி தூங்காமலிருப்பாளோ? இப்படி இருந்தால் உடம்புக்கு என்ன ஆகும்?’ என்று ஏங்க ஆரம்பித்து விடுவார்! ஏதாவது நல்ல டிசைன் உள்ள புடவையைப் பார்த்தால் ‘இது மணி கட்டிக் கொண்டால் எவ்வளவு அழகாக இருக்கும்?’ என்று என்னிடம் சொல்லி சந்தோஷப்படுவார். அதே போல் அவர் மனைவி மணிமாலாவுக்கும் மூர்த்தி என்றால் கொள்ளை பிரியம். இவர்களது இணை பிரியாத அன்பைக் கண்டு நான் பலமுறை நெகிழ்ந்து போயிருக்கிறேன். இந்த மனம் ஒருமித்த தம்பதிகள், பல ஆண்டுகள் வாழ நான் இறைவனைத் தினமும் பிரார்த்திக்கிறேன்.

பேட்டி – சிக்கி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.