டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

காவியத் தலைவா எங்கு நீ சென்றாயோ! சிவாஜி கணேசன்

எனது அருமை நண்பர், கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கவிதையாக வாழ்ந்து, காவியமாக மாறி விட்டவர்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:13 pm

உமா ஷக்தி.

எனது அருமை நண்பர், கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கவிதையாக வாழ்ந்து, காவியமாக மாறி விட்டவர். காலத்தால் அழியாத காவியத் தலைவனான அவரது கலை உலகச் சாதனைகளும், இலக்கியச் சாதனைகளும், பக்தி நயமும்  இமயமாகக் குவிந்து கண் முன் நிற்கின்றன.

பாரதக் கலை உலகில் கம்பன், காளிதாசன், பாரதி என்ற சாதனையாளர்களின் வரிசையில் கம்பீரமாகக் காட்சி அளிப்பவர் கவிஞர் கண்ணதாசன், நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பாக்களையும் கவிதைகளையும் இயற்றிய கவிஞர் கண்ணதாசன். நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பாக்களையும், கவிதைகளையும் இயற்றிய பெருங்கவிஞர் அவர்.

கலை உலகில் கண்ணதாசன் ஒரு சாதனைச் சிகரம். அவர் அற்புதமான பாடலாசிரியர் மட்டுமல்ல, கதை-வசனங்களிலும் கவி நயத்துடன் இலக்கியச் சுவையையும் வாரி வழங்கியவர்.

நாட்டில் எத்தனையோ கவிஞர்கள் தோன்றலாம்-புகழ்பெறலாம். ஆனால் கவிஞர் கண்ணதாசன் வகித்த இடத்தை யாரும் பெற முடியாது.

நண்பனே! நீ எங்கு சென்றாயோ?

‘நதியில் விளையாடி

கொடியில் தலைசீவி

நடந்த இளந் தென்றலே!

வளர் பொதிகை மலை தோன்றி

மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே…’

தமிழே! தமிழின் சுவையே! இனிமையே! இணையற்ற கவிஞனே! உன் வரலாறு காவியமாகும்! உன் கவிதைகள் அழியாத கல்வெட்டுக்களாகும்! நீ பாடியதெல்லாம் தத்துவங்களாகும்!

தமிழே! தமிழ் அமுதே1 கவியரசே! காவியத் தலைவா! நின் புகழ் வாழ்க! நின் புகழ் வாழ்க!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.