டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கடல் மீன்கள்

கே.ஆர்.ஜி.ஆர்ட் புரொடக்‌ஷன் என்கிற கடலில் நீந்தித் திரியும் மீன்களுக்கிடையே பிரமாண்டமான சுறா மீனாக விளங்குகிறார் கமலஹாசன்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:13 pm

உமா ஷக்தி.

கே.ஆர்.ஜி.ஆர்ட் புரொடக்‌ஷன் என்கிற கடலில் நீந்தித் திரியும் மீன்களுக்கிடையே பிரமாண்டமான சுறா மீனாக விளங்குகிறார் கமலஹாசன்.

கமலஹாசன் அண்டு கமலஹாசன் என்று டைட்டில் கார்டிலேயே வித்தியாசப் படுத்தி இருப்பதற்கேற்ப இரட்டை வேடங்களையும் ஒன்றுக்கொன்று ஸ்நானப் பிராப்திகூட இல்லாமல் செய்திருக்கிறார் கமல். ஆனால் நினைவில் நிற்பதோ அப்பாதான். ‘அந்தக் கேரக்ட்ரை நாம் எங்கோ பார்த்திருக்கிறோமே!’ என்று யோசித்து, மண்டைக் குடைச்சல் ஏற்படக் கூடிய அளவுக்கு ஐடெண்டிஃபிகேஷன் கிடைக்கிறது.

அப்பழுக்கற்ற நடிப்பால், பார்ப்பவர் மனத்தைக் கவர்ந்தாலும் சுஜாதா, கமலுடன் இணைய அவரது தோற்றம் அனுமதிக்கவில்லையே?

அம்பாகப் பாய்ந்து, அழகாக நடனம் ஆடுகிறார் அம்பிகா.

இயற்கையிலேயே வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த ஸ்வப்னா, பணக்கார வீட்டுப் பெண்ணாக நடித்திருப்பதில் வியப்பில்லை.

அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கின்ற கேரக்டர் சுகுமாரிக்கு. அற்புதமாகச் செய்திருக்கிறார்.

புத்துயிர் பெற்றிருக்கிறார் நாகேஷ்.

வித்தியாசமான வில்லன் சங்கிலி முருகன்.

கண நேரமே தோன்றினாலும் கண்ணெதிரிலேயே நிற்கிறார் கண்ணன்.

பஞ்சு அருணாசலம், ஜி.என்.ரங்கராஜன், என்.கே.விசுவநாதன், இளையராஜா யூனிட்டின் படம், என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

மொத்தத்தில் கருவாடு.

-திரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.