‘ஏ’ படங்கள் அதிகம் ஏன்?
இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் ஏ சர்டிபிகேட் சினிமாப் படங்கள் 107 வந்துள்ளன என்று தகவல் ஒளிபரப்புத்


இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் ஏ சர்டிபிகேட் சினிமாப் படங்கள் 107 வந்துள்ளன என்று தகவல் ஒளிபரப்புத் துறை ராஜாங்க மந்திரி ராம் துலாரி சின்ஹா கூறியிருக்கிறாரே, அதற்கு என்ன காரணம் என்று தென்னிந்திய பிலிம் சேம்பர் தலைவர் கே.பி.கொட்டாரக் ராவிடம் கேட்டதற்கு ’ஏ’ படங்கள் இவ்வளவு தூரம் அதிகரித்து இருப்பதற்கு காரணகர்த்தா சென்சார் போர்டுதான்’ என்றார்.
ஏ சர்டிபிகேட் எந்தப் படத்திற்கு கொடுக்க வேண்டும். எந்தப் படத்திற்குக் கொடுக்கக் கூடாது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது! முன்பெல்லாம் ஏ சர்டிபிகேட் என்றால் செக்ஸ் அதிகம் இருக்கும். இல்லை திகில் காட்சி இருக்கும். அதனை வைத்து ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது பெண்கள் கர்ப்பம் தரிக்கும் சீன் வந்தால், கர்ப்பத் தடையைப் பற்றி காட்டினால் ஏ கொடுப்பது வழக்கமாகிவிட்டது. சென்னை மக்களை பொருத்தவரை சாதாரணமாகவே இதை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பி, சியில் படம் போகும் போது, ‘ஏ’ என்றால் பட வசூல் பாதிக்கிறது. எதிர்பார்த்தது ஒன்றும் இல்லாததால் படம் பார்ப்போரிடம் ஒரு பரபரப்பு இல்லாமல் போய்விட்டது.
சென்ற வருடம் சென்னையில் தயாரான 475 படங்களில் 197 படங்களுக்கு ஏ. கல்கத்தாவில் அதிகம் இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பு குறிப்பிட்ட சில காட்சிகளுக்காக ஏ சர்டிபிகேட் கொடுத்தார்கள். இப்போது சென்சார் போர்டில் சரியான நிர்வாகத்தன்மை இல்லாத காரணத்தால் நினைத்தை எல்லாம் முத்திரையைப் பதிக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது யார் என்பதை சென்சார் போர்டு கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க வேண்டும்.
பேட்டி – சிவாஜி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...