நடிகை தீபாவின் திட்டம்!
உள்ளம் நிறைய ஆசையோடு உன்னி மேரியாகச் சென்னைக்கு வந்த கேரளத்துக் கட்டழகியை, அந்த நம்பிக்கை


உள்ளம் நிறைய ஆசையோடு உன்னி மேரியாகச் சென்னைக்கு வந்த கேரளத்துக் கட்டழகியை, அந்த நம்பிக்கை நசித்துப் போகாமல் காப்பற்றிய பெருமை டைரக்டர் ‘முக்தா’ சீனிவாசனைச் சாரும்.
உன்னி மேரியை ‘தீபா’வாக்கினார். தமது தமிழ்ப் படத் தயாரிப்பில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பளித்தார். இன்று?
திரும்பிய பக்கமெல்லாம் தீபா! பல மொழிப் படங்களில் நடிக்கிறார். பலருடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது கவர்ச்சி விழிகளும் அவற்றிலிருந்து பிரதிபலிக்கும் காந்தப் பார்வைகளும் தென்னாட்டு ரசிகர்களுக்குத் தெவிட்டாத தேன் விருந்தாக இருக்கின்றன.
தீபா, தன்னுடன் நடிப்பவர் யாரென்று கேட்பதில்லை. ‘யார் டைரக்டர், என்ன கதை?’ எதைப்பற்றியும் கவலை இல்லை. வண்டிச் சக்கரத்தைச் சுழற்ற மைசூருக்கும் போவார்; ஏ.வி.ரமணனுக்குப் பின்னால் ‘காதல், காதல், காதல்’ என்றும் குழைவார்.
காற்றுள்ள போதே பண நோட்டுக்களையும் புகழையும் தன் பக்கமாகத் தூற்றிக் கொள்ளத் தெரிந்தவர். இந்த சாமர்த்தியம் எல்லா நடிகைகளுக்கும் வராது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...