டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அமெரிக்காவில் அவுட்டோர் அனுபவங்கள் – சீமா

‘ஒரே வானம், ஒரே பூமி’ படப்பிடிப்புக்காக இரண்டு முறை அமெரிக்காவுக்குப் போயிருக்கிறேன். முதல் தடவை

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:11 pm

உமா ஷக்தி.

‘ஒரே வானம், ஒரே பூமி’ படப்பிடிப்புக்காக இரண்டு முறை அமெரிக்காவுக்குப் போயிருக்கிறேன். முதல் தடவை முப்பது நாட்கள், இரண்டாம் தடவை பதினைந்து நாட்கள்.

நியூயார்க்  விமான நிலையத்தில் இறங்கியதும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது. ஒரே பயம்! ஒரு பக்கம் விளையாட்டுப் பொம்மைகளை அடுக்கி வைத்தது போல வரிசை வரிசையாகப் பெரிய விமானங்கள். மறுபக்கம் பயணிகள். பெரிய பெட்டிகளைச் சுமந்து செல்லும் கன்வேயர் பெல்ட்டுகள். அதையெல்லாம் கண்டு அசந்து போய் விட்டேன். எங்கே திரும்பினாலும் ஒரே இயந்திரமயம். சீக்கிரமே ஊருக்குத் திரும்பினால் தேவலையே என்று தோன்றியது.

திருமதி கே.ஆர்.விஜயா தகதகவென்று பட்டுப்புடவை கட்டிக் கொண்டு பவனி வந்ததை பலர் வியப்புடன் பார்த்தார்கள்!

வளைந்து வளைந்து செல்லும் ரயில், தலை கீழாகச்சுற்றும் கார். அந்த இடத்தில் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு காரில் காமிராவைப் பொருத்தி அதன் பின்னால் என்னையும் ஜெய்சங்கர் சாரையும் உட்கார வைத்துவிட்டார்கள். நாங்கள் எதிர்பார்த்தபடி அந்தக் கார்கள் நேராகச் செல்லவில்லை. வளைந்து வளைந்து தலைகீழாகச் செல்ல, நான் ‘ஐயோ, ஐயோ’! என்று அலறினேன். ஜெய் சார் ‘சீமா, என்னைக் கெட்டியாகப் பிடிச்சுக்கோ’ என்று சொல்லிக் கொண்டே. ‘ஐயோ சொல்லாதே; முருகா, முருகான்னு சொல்’ என்று யோசனை கூறினார்.

‘அம்மா, முருகா காப்பாத்து’ என்று நான் அழுது புலம்புவதைப் பார்த்த டிரைவர் காரை நிறுத்தினார். படபடப்புடன் காரிலிருந்து இறங்கி அங்கேயிருந்த மரத்தைப் பிடித்துக் கொண்டு அழுதேன்.

அங்கே இன்னொரு காட்சி. உயரமான மூன்று கம்புகள். அதில் இரண்டு பெண்களும், ஓர் ஆணும் உச்சியில் ஏறுகிறார்கள். மூன்று பேரும் மாறி மாறிக் குச்சிகளில் தாவும் போது நமது உடம்பே சிலிர்க்கிறது. நான் சட்டென்று கண்களை மூடிக் கொண்டேன். வயிற்றுப் பிழைப்புக்காக எப்படியெல்லாம் உடலை வருத்திக் கொள்கிறார்கள் என்று நினைக்கும் போது பயம் கவ்வுகிறது.

அமெரிக்காவில் நியூ ஜெர்ஸி நகரில் பத்மினி அக்கா வீடு இருக்கிறது. சாதாரணமாக அமெரிக்க வீடுகள் ஃப்ளாட் சிஸ்டம்தான். ஆனால் பப்பி அக்கா வீடு தனியாகவும் அழகாகவும் இருக்கிறது. ஒவ்வொரு அறையையும் சுத்தமாக வைத்திருந்தார். அங்கே தங்கியிருந்தபோது பப்பி அக்கா போட்ட சாப்பாட்டை என்னால் மறக்கவே முடியாது!

பேட்டி – மன்னை செளரிராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.