டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தவநிதி

தேவையானவை:

பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - 1  தேக்கரண்டி
தனியாத்  தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 கால்  தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3  தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
கிராம்பு - 4
பட்டை - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -  2

செய்முறை:

வெங்காயம், தக்காளியைப்  பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை  நீளமாக கீறி கொள்ளவும். பன்னீரை துண்டுகளாக்கி, சுடுதண்ணீரில்  போட்டு எடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி  1 நிமிடம் வதக்கி  தனியாக  எடுத்து கொள்ளவும். பின்னர்  அதே  கடாயில்    நெய் ஊற்றி   பட்டை   கிராம்பு   போட்டு  தாளித்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்னர், அதில் அனைத்து  தூள்களையும்  சேர்த்து, தேவையான அளவு  உப்பு  சேர்த்து கிளறி, 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து  நன்கு கொதிக்க விட வேண்டும். எண்ணெய் தனியாக பிரிந்து வந்தவுடன்  அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து 2  நிமிடம்  கிளறி மல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கடாய் பன்னீர் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.