15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பாதாம் வால்நட் பர்ஃபி

வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம். பாதாம் வால்நட் பர்ஃபி ரெடி.

News image
Updated On :6 நவம்பர் 2016, 6:30 pm

தேவையானவை:
பாதாம் பருப்பு -  1 கிண்ணம்
வால்நட் - அரை கிண்ணம்
சர்க்கரை - 1 1/4 கிண்ணம்
பால் - 1/4 கிண்ணம்
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா - 1 சிட்டிகை

செய்முறை:

பாதாம் பருப்பையும், வால்நட்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து  தோல்நீக்கி, பாலுடன் சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஓர் அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் அரைத்த விழுது, சர்க்கரை,வெண்ணெய்,ஏலக்காய்த்தூள், ஆப்பசோடா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து அப்படியே அடுப்பில் வைத்து நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

பாத்திரத்தில் ஒட்டாமல்  வரும் போது, அடுப்பை அணைத்து,  நெய் தடவி தயராக வைத்து உள்ள தட்டில் கொட்ட வேண்டும்.

பின்னர் வேண்டிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம். பாதாம் வால்நட் பர்ஃபி ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.