எல்லா வேளையும் அறுசுவை உணவு உண்டு, சப்ர மஞ்ச கட்டிலில் படுத்துறங்கி, தோன்றினால் நீதி போதனை சொல்லிக்கொண்டு, ஒன்றும் தோன்றாதபோது பல்லக்கில் ஏறி உலகைச் சுற்றி வரலாம்.
உலகத்துடன் எனக்கு இருந்த ஒற்றை உறவையும் முடித்துக்கொண்டு வந்திருக்கிறேன். இனி நான் கட்டற்றவன். காற்றேதான். சந்தேகமில்லை. காற்றை வெல்வதைக் காட்டிலும் காற்றாகிவிடுவது எத்தனை உயர்ந்தது.
என்னவானாலும் நான் இதில் என்னைப் பொருத்திக்கொள்வதில்லை என்று முடிவு செய்துகொண்டேன். இது ஒரு கடமை. இதை நான் செய்தே தீர வேண்டும். அவள் இருந்த உடலை இல்லாமல் ஆக்கும்வரை இங்கு இருக்கத்தான் வேண்டும்.
நாங்கள் அவள் கண்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். மிகச் சரியாக எட்டாவது விநாடி அவள் கண்ணைத் திறந்தாள். ஒரு புன்னகை செய்தாள். பிறகு மூடிக்கொண்டாள்.
வரதராஜரைக் காட்டிலும் ரங்கநாதர் தனது சேவாகால கோஷ்டியினரை சௌக்கியமாக வைத்துக்கொள்கிறார். வேளைக்குச் சாப்பாடும் செலவுக்குப் பணமும் பெரிய விஷயமல்ல. அது எங்கும் கிடைக்கும், எப்படியாவது கிடைத்துவிடும்.
என் ரேகையே இல்லாமல் உலகெங்கும் என் கரங்களை நான் பதித்துக்கொண்டிருந்தேன். சிலரது கண்ணீரைத் துடைப்பதற்கும் சிலருக்குக் கண்ணீர் வரவழைக்கவும். என் கண்களில் இல்லாதது அது.