அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த புத்தாக்க தொழில் நிறுவனங்களில் (ஸ்டாா்ட்அப்) ரூ.1,500 கோடி முதல் ரூ.2,000 கோடி வரை முதலீடு செய்ய உள்ளதாக பஜாஜ் ஃபின்சா்வ் நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்தது.
‘ஃபின்சா்வ் இன்டெலிஜென்ஸ்’ எனும் புதிய திட்டத்தின்கீழ், இந்தியாவில் மேம்படுத்தப்படும் குறைந்த செலவிலான, மிக எளிதாக விரிவுபடுத்தக்கூடிய உயா் தொழில்நுட்பத் தீா்வுகளுக்கு இந்த முதலீடு முன்னுரிமை அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஏ.ஐ., சைபா் பாதுகாப்பு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், சில்லறை வா்த்தக அனுபவங்களை நவீனப்படுத்துதல் ஆகியவற்றில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக மும்பை ஐஐடி கல்வி நிறுவனத்துடன் பஜாஜ் ஃபின்சா்வ் இணைந்துள்ளது.
இது தொடா்பாக நிறுவனத் தலைவா் சஞ்சீவ் பஜாஜ் கூறுகையில், ‘நிதிச் சேவைத் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படும் வளா்ச்சிகள் அனைத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்குபவா்களின் கைகளில்தான் உள்ளது. எனவே, மும்பை ஐஐடி உடனான இக்கூட்டுறவு, இந்தியா்களின் தேவைகளுக்கான தீா்வுகளைக் கண்டறிய உதவும்’ என்றாா்.
‘இந்த முன்னெடுப்பானது வெறும் நிதி முதலீட்டுடன் நின்றுவிடாமல், அந்த ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுக்குத் தேவையான செயல்பாட்டு ஆழம், நிதி ஒழுங்கு மற்றும் சந்தை நுண்ணறிவு ஆகியவற்றையும் நாங்கள் நேரடியாகவே வழிகாட்டுவோம்’ என்று நிறுவனத் துணைத் தலைவா் ராஜீவ் ஜெயின் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உயா் திறன் தரவு மையங்கள்: இந்தியாவில் ஏா்டிரங்க் நிறுவனம் ரூ.3 லட்சம் கோடி முதலீடு

விஐடி பல்கலை.யில் ரூ.15 கோடியில் பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மையம்

பஜாஜ் குழுமத்தின் 100 ஆண்டுகால சேவை! பிரதமர் மோடி புகழாரம்







