புதுதில்லி: டயர் தயாரிப்பு நிறுவனமான, ஜே.கே. டயர் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மார்ச் 2026 உடன் முடிவடைந்த 4வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 80 சதவீதம் உயர்ந்து ரூ. 177.96 கோடி ஈட்டியுள்ளதாக இன்று அறிவித்தது.
கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டில் நிறுவனம் ரூ. 98.66 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய், கடந்த ஆண்டு இருந்த ரூ. 3,758.60 கோடியிலிருந்து உயர்ந்து தற்போது ரூ. 4,223.44 கோடியாக அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் செலவினங்கள் ரூ. 3,909.65 கோடியாக இருந்த நிலையில், அதன் மொத்த வருமானம் 2 சதவீதம் உயர்ந்து ரூ. 4,232.83 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.
ஜே.கே டயர் இயக்குநர்கள் குழு, 'டிரக் மற்றும் பேருந்துகளுக்கான ரேடியல் டயர்கள்' மற்றும் 'பயணிகள் கார்களுக்கான ரேடியல் டயர்கள்' ஆகியவற்றின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்காக, பல்வேறு கட்டங்களாக ரூ. 4,980 கோடி முதலீடு செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டிற்கான நிதி, நிறுவனத்தின் உள் வருவாய் மற்றும் கடன் வாயிலாகத் திரட்டப்படவுள்ளது.
2026ஆம் நிதியாண்டிற்கான ஈவுத்தொகையானது, ரூ. 2 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் ரூ. 4 வழங்குமாறு இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில், ஜே.கே டயர் நிறுவனத்தின் பங்குகள் 1.97 சதவீதம் உயர்ந்து, பங்கு ஒன்றுக்கு ரூ. 394.10ஆக நிறவடைந்தன.
Summary
JK Tyre & Industries posted 80 per cent surge in consolidated net profit at Rs 177.96 crore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











