புதுதில்லி: இந்தியாவின் மிகப்பெரிய சொகுசு ஹோட்டல் சங்கிலிகளில் ஒன்றான ஐடிசி, சிறந்த விருந்தோம்பல் பாரம்பரியத்தை உலகளாவிய தரத்திலான சேவைகளுடன் ஒருங்கிணைத்து, ஒவ்வொரு இடத்தின் அதன் கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கிறது.
ஐடிசி ஹோட்டல், மார்ச் வரையான காலாண்டிற்கான அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 23.1 சதவீதம் உயர்ந்து ரூ. 317.43 கோடியாக இருப்பதாக தெரிவித்தது. அதே வேளையில், ஜூரி ஹோட்டல் & ரிசார்ட்ஸ் நிறுவனத்தை ரூ. 205 கோடி மதிப்பீட்டில் கையகப்படுத்த உள்ளதாகவும் அறிவித்தது.
கடந்த ஆண்டுன் ஒப்பிடும்போது, இதே காலகட்டத்தில், நிறுவனம் ரூ. 257.85 கோடி நிகர லாபத்தை ஈட்டியது. 4வது காலாண்டில், செயல்பாடுகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் ரூ. 1,060.62 கோடியிலிருந்து உயர்ந்து ரூ. 1,253.70 கோடியாக இருப்பதாகவும், கடந்த ஆண்டு ரூ. 749.81 கோடியாக இருந்த மொத்தச் செலவினங்களும் தற்போது உயர்ந்து ரூ. 895.35 கோடியாக அதிகரித்துள்ளது.
ஜூரி ஹோட்டல் & ரிசார்ட்ஸ் நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளைக் கையகப்படுத்துவதற்கான பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தையும் நிறுவனத்தின் நிர்வாகக் குழு நிறைவேற்றியது.
மார்ச் 2026 உடன் முடிவடையும் நிதியாண்டிற்கான, ஈவுத்தொகையை பங்குக்கு ஒன்றுக்கு ரூ. 1 வீதம் வழங்க நிறுவனத்தின் நிர்வாகக் குழு பரிந்துரைத்துள்ளது.
Summary
ITC Hotels on Friday reported a 23.1 per cent rise in consolidated net profit for March quarter.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











