திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்டட்ஸ் அக்சஸரீஸ் 4வது காலாண்டு லாபம் 6% உயர்வு!

2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், நிறுவனம் வரிக்குப் பிந்தைய லாபமாக 6.1 சதவீதம் உயர்ந்து ரூ. 21.1 கோடியாக இருப்பதாக அறிவித்தது.

News image
Updated On :24 மே 2026, 9:58 pm IST

மும்பை: தலைக்கவசம் தயாரிப்பு நிறுவனமான ஸ்டட்ஸ் அக்சஸரீஸ், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், வரிக்குப் பிந்தைய லாபமாக 6.1 சதவீதம் உயர்ந்து ரூ. 21.1 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

இதுவே, கடந்த ஆண்டின் 4வது காலாண்டில் இது ரூ. 19.9 கோடியாக இருந்தது.

மதிப்பாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்தக் காலாண்டில், செயல்பாடுகள் மூலம் ஈட்டப்பட்ட நிகர வருவாய் ரூ. 167.5 கோடியாகவும், இதுவே கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டில், ஈட்டப்பட்ட ரூ. 149.8 கோடியை விட இது 11 சதவீதம் அதிகமாகும்.

2026 நிதியாண்டு முழுமைக்கும் கணக்கிடுகையில், நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 18.7 சதவீதம் உயர்ந்து ரூ. 82.7 கோடியாக இருந்தது. அதே வேளையில், நிறுவனத்தின் வருவாய் 8.6 சதவீதம் உயர்ந்து ரூ. 634.2 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.

மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு கலவை, முயற்சி, செயல்பாட்டுத் திறன் மற்றும் அனைத்துத் துறைசார்ந்தும் பிராண்டிற்கு கிடைத்துள்ள வலுவான அங்கீகாரம் ஆகியவற்றின் துணையுடன், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைகள் இரண்டிலும் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவு செய்த ஆண்டாக 2026 அமைந்தது, என்று ஸ்டட்ஸ் அக்சஸரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்தார்த் பூஷன் தெரிவித்தார். அதே வேளையில், அடுத்த 15 முதல் 18 மாதங்களுக்குள் கூடுதலாக 15 லட்சம் தலைக்கவசங்களை உற்பத்தி செய்யும் வகையிலான உற்பத்தித் திறன் விரிவாக்கத் திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்த பிறகு, எங்களின் மொத்த உற்பத்தித் திறன் 30 சதவீதம் உயர்ந்து, ஆண்டுக்கு 1 கோடியே 25 லட்சம் தலைக்கவசங்கள் என்ற அளவை எட்டும்.

Summary

Studds Accessories reported a 6.1 per cent growth in the March quarter of FY26.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.