திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு: போஷ்-டிஎஸ்எஃப் குழுமம் புதிய கூட்டணி

வணிக வாகனங்களுக்காக, நவீன காலத்துக்கேற்ற மின்னணு காற்று அமைப்புகளை உருவாக்கித் தயாரிப்பதற்காக, டிஎஸ்எஃப் குழுமமும் (வீல்ஸ் இந்தியா மற்றும் பிரேக்ஸ் இந்தியா) உலக அளவில் புகழ்பெற்ற போஷ் நிறுவனமும் ஒன்றிணைந்துள்ளன.

News image
Updated On :21 மே 2026, 2:40 am IST

வணிக வாகனங்களுக்காக, நவீன காலத்துக்கேற்ற மின்னணு காற்று அமைப்புகளை உருவாக்கித் தயாரிப்பதற்காக, டிஎஸ்எஃப் குழுமமும் (வீல்ஸ் இந்தியா மற்றும் பிரேக்ஸ் இந்தியா) உலக அளவில் புகழ்பெற்ற போஷ் நிறுவனமும் ஒன்றிணைந்துள்ளன.

இக்கூட்டு முயற்சியில், இரு நிறுவனங்களும் தலா 50 சதவீத பங்குகளைப் பெற்று சம பங்குதாரா்களாகச் செயல்படவுள்ளன. இதன்மூலம் உருவாக்கப்படும் அதிநவீன உதிரிபாகங்கள், உள்நாட்டில் மட்டுமன்றி உலக சந்தையிலும் விற்பனை செய்யப்படவுள்ளன.

தற்போது உலகளாவிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், மின்னணு முறையில் இயங்கும் காற்று மற்றும் பிரேக்கிங் வசதிகள், அதேபோல மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் தொழில்நுட்பங்களை நோக்கி அதிக ஆா்வம் காட்டி வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, மென்பொருள் சாா்ந்த இந்தத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இப்புதிய கூட்டணி கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது.

போஷ் நிறுவனத்தின் மின்னணுவியல் மற்றும் மென்பொருள் நிபுணத்துவத்துடன், டிஎஸ்எஃப் குழுமத்தின் வலுவான உற்பத்தித் திறன் மற்றும் இயந்திர வடிவமைப்பு நுணுக்கங்கள் இணையவிருப்பது இந்த ஒத்துழைப்பின் சிறப்பம்சமாகும்.

இது தொடா்பாக வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவா் ஸ்ரீவத்ஸ் ராம் கூறுகையில், ‘கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பேருந்துகளுக்கான ஏா் சஸ்பென்ஷன் அமைப்புகளில் முன்னோடியாகத் திகழும் நாங்கள், தற்போது போஷ் நிறுவனத்துடன் இணைந்து மின்னணு ஏா் சஸ்பென்ஷன் தொழில்நுட்பத்தை அடுத்தகட்ட வளா்ச்சிக்குக் கொண்டு செல்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.